கரூர் மாவட்டம் நொய்யல் - பரமத்திவேலூர், குறுக்குச்சாலை - குட்டக்கடை, வேலாயுதம்பாளையம் - தளவாபாளையம் சாலைகள் மற்றும் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட வழித்தடங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், நகர பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.