கடமலைக்குண்டு நேருஜிநகரில் இருந்து சிறப்பாறை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. மேலும் ஜல்லிக்கற்களும் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.