தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் எல்லைக்கு உட்பட்ட ஆற்றுக்கரை சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புளியக்குடி