குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-09 09:44 GMT


திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட 15 வேலம்பாளையம்-சிறுபூலுவப்பட்டி பிரதான சாலையில், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே கடந்த பல நாட்களாக சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் சாலையின் நடுவே உள்ள பெரிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவியன், திருப்பூர்.

மேலும் செய்திகள்