சாலை பள்ளத்தால் தொடரும் விபத்து

Update: 2025-11-02 18:37 GMT

 திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள், மருந்தகங்கள், மொத்த விற்பனைக்கடைகள், பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் வாகனப்போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்நிலையில் அய்யப்பா நகர் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வேகத்தடைக்கு அருகில் பெரிய அளவில் பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் வேகத்தடையில் ஏறி இறங்கும் வாகன ஓட்டிகள், குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்லும் பெற்றோர் தடுமாறி வருகின்றனர். சில நேரங்களில் தடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

-குமார், திருப்பூர். 

மேலும் செய்திகள்