நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அளவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட தச்சன் காடு பகுதியில் இருந்து கோம்பைக்காடு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள இந்த சாலையை அகற்றிவிட்டு புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.
-தனசேகரன், கோம்பைக்காடு.