சேதமடைந்த தார்சாலை

Update: 2025-10-26 17:05 GMT

அரூர் அடுத்த கோட்டப்பட்டியில் இருந்து கருமந்துறை செல்லும் தார் சாலையை நரிப்பள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, அரூர்.

மேலும் செய்திகள்