மேச்சேரி அருகே தீராம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள் கடும் சிரமப்பட்டு சென்று வருகின்றன. மேலும் சிலர் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்த தீர்வும் இல்லை. அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுத்து சாலையை சீமைப்பார்களோ? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-மணி, தீராம்பட்டி.