கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளிக்கு செல்வதற்கு சேந்தமங்கலம் வழியாக பிரதான சாலை உள்ளது. அந்த சாலையில் அடிக்கடி விவசாய விளை பொருட்களை உணர்த்தும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொல்லிமலைக்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் பொருட்களை உலர வைப்பதை தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுந்தரேசன், ஆர்.பி. புதூர்