பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே உள்ள கர்த்தாரப்பட்டி முதல் அகரம்-கம்மாளப்பட்டி செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகள்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தமிழரசன், பாலக்கோடு.