சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-10-05 17:15 GMT

சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்ல கூடிய சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக உத்தனப்பள்ளியில் இருந்து வரக்கூடிய வாகனங்களும், கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரிக்கு வரக்கூடிய வாகனங்களும் சந்திக்க கூடிய பகுதியாக இருப்பதால் அந்த இடத்தில் வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிடுகிறது. இதனால் விபத்துகளும் நடக்கின்றன. பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமான சாலை சீரமைக்கப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேஷ், பென்னிக்கல்.

மேலும் செய்திகள்