குண்டும், குழியுமான சாலை

Update: 2025-09-28 15:46 GMT

மேச்சேரி அருகே தீராம்பட்டி, காட்டுவளவு, கும்மிரட்டிப்பட்டி, குள்ள காளிப்பட்டி, சடையன் காடு மற்றும் குட்டப்பட்டி, புளியம்பட்டி, பழையூர் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை போடப்பட்டு கடந்த 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை குண்டும், குழியுமாகவும், ஆங்காங்கே மேடு, பள்ளமாகவும் காணப்படுகிறது. இந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகண்டன், மேச்சேரி.

மேலும் செய்திகள்