கொல்லிமலை அடிவாரம் 3-வது கொண்டை ஊசி வளைவில் கற்கள் பெயர்ந்த நிலையில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றன. மேலும் இரவு நேரத்தில் சாலை சேதடைந்திருப்பது தெரியாமல் அதில் சிக்கி கிழே விழுந்து காயமடைகின்றன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.
-நாராயணன், கொல்லிமலை.