வேகத்தடைக்கு வர்ணம்

Update: 2025-09-28 15:29 GMT

பர்கூர் எமக்கல்நத்தம் தார்சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை இருப்பதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி தாமதமின்றி வேகத்தடைக்கு வர்ணம் பூசவும், இரு புறங்களிலும் எச்சரிக்கை பலகை வைக்கவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், எமக்கல்நத்தம்.

மேலும் செய்திகள்