தஞ்சையை அடுத்த கோ.வலுண்டான்பட்டு பகுதியில் வேங்கராயன் குடிக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீரனார் கோவில் தெருவில் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. சாலை குண்டும்,குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.