Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 12:50 PM GMT
Palvannan
#57255

மயான கொட்டகை தேவை

மற்றவை

திருவோணம் சிவவிடுதி அருகே பில்லக்குறிச்சி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மயான கொட்டகை இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை மழையிலும், வெயிலிலும் வைத்து இறுதி சடங்குகளை செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மயான கொட்டமகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 2:15 PM GMT
Palvannan
#56556

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

வாய்க்கால் தூர்வாரப்படுமா?தண்ணீர்

தரங்கம்பாடி தாலுகாவில் விஷலூர் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி இருந்து வருகிறது. செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், பாசன வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தண்ணீர் திறந்துவிடப்படும் போது பாசன வாய்க்காலில் நீர் செல்வதில் தடை ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:44 AM GMT
Palvannan
#55423

தெருவிளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஒன்றியம் 70 கீரனூர் கிராமத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 70 கீரனூர் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 10:09 AM GMT
Palvannan
#42328

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி தெருவில் உள்ள சாலைகள் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரினால் மாணவ-மாணவிகள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 11:11 AM GMT
Palvannan
#42140

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

மயிலாடுதுறை வடகரை ஜவகர் தெரு சந்திப்பு பகுதியில் சாலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கவும், இனிவரும் காலங்களில் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 10:23 AM GMT
Palvannan
#41928

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

நாகையை அடுத்த வெளிப்பாளையம் சிவன் கோவில் சன்னதி தெரு ௮ங்கன்வாடி கட்டிடம் அருகே மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் வடிவதற்கு வழியின்றி சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் அதிகளவில் உருவாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 2:46 PM GMT
Palvannan
#41461

மின்விளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

தஞ்சை பகுதி சிந்தாமணி நகர், சாந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மின்விளக்குகள் உள்ளன. இந்த மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 11:23 AM GMT
Palvannan
#40379

மின்விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

நாகை மாவட்டம் கட்டுமாவடி ஆலத்தூர் இடையிலான சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருள் சூழ்ந்து கிடப்பதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 12:45 PM GMT
Palvannan
#39601

பஸ் நிலைய வளாகத்தில் தேங்கும் மழைநீர்

மற்றவை

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நகர பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள பகுதி தாழ்வாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 11:24 AM GMT
Palvannan
#38726

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல், புதுப்பட்டிணம் பகுதியில் உள்ள கிராம இணைப்பு பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 1:24 PM GMT
Palvannan
#38557

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை இரவு நேரங்களில 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி்க்கொள்கின்றனர். இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 2:00 PM GMT
Palvannan
#38351

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி பகுதி கடைவீதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும்,குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick