19 Nov 2023 11:11 AM GMT
#42140
சாலையில் தேங்கும் மழைநீர்
மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Palvannan
மயிலாடுதுறை வடகரை ஜவகர் தெரு சந்திப்பு பகுதியில் சாலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கவும், இனிவரும் காலங்களில் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.