தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி அடுத்து உள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோவில் அருகே இரண்டு பெரிய வேகத்தடைகள் உள்ளன. இவை வர்ணம் பூசப்படாததால் இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசியும், எச்சரிக்கை ஒளிரும் பட்டைகள் அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-கதிர், நல்லம்பள்ளி.