தாராபுரம்-பல்லடம் சாலையில், குண்டடத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் மேற்கே, நால்ரோடு (எரகாம்பட்டி பிரிவு) உள்ளது. இதற்கு மேற்கே பொடாரம்பாளையம், சேடபாளையம், கத்தாங்கண்ணி, செங்காளிபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு செல்லும் தார்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.