மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் கிராண்ட்லைன் பகுதியில் சாலை சிதலமடைந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுதவிர அதிகப்படியான புழுதியும் வாகன ஓட்டிகளின் கண்களை நிரப்புவதால், விபத்துகளுக்கு வலை விரிப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.