சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் 4-வது தெருவில் சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் வரவில்லை என்று சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த பள்ளங்களை மூடியுள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.