வேலூர் சேண்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மீது வரிசையாக சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில சிமெண்டு சிலாப்புகள் உடைந்தும், இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறும் ஆபத்தான நிலையில் உள்ளன. இரவில் நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும்முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், சேண்பாக்கம்.