சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பழைய சூரமங்கலம் செல்லும் தார்சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கியாஸ் லைன் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த சாலையில் தான் ஏராளமான பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் கனரக வாகனங்களும் அதிகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்த்து சாலையை சீரமைக்க முன்வருவார்களா?
-பொதுமக்கள், சேலம்.