சேறும், சகதியுமான சாலை

Update: 2025-09-21 10:49 GMT

கந்தம்பட்டி அருகே உள்ள மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் ஏராளமான குடோன் மற்றும் கேஸ் கம்பெனிகள் உள்ளன. இதனால் தினசரி ஏராளமான லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மண் சாலையாக இருப்பதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராமச்சந்திரன், கன்னங்குறிச்சி.

மேலும் செய்திகள்