குண்டும், குழியுமான சாலை

Update: 2025-09-21 10:06 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பகவதி அம்மன் கோவில் அருகே சாலை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்