நாமக்கல்லில் திருச்சி சாலை வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்விழாநகர் பகுதியில் இருந்து கங்காநகர் செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த இணைப்பு சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலை தற்போது சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் சிறு,சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், நாமக்கல்.