சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2025-09-14 14:07 GMT

கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் பூந்தோட்டம் எனப்படும் பகுதியில் சமீபத்தில் பெய்த மழைக்கு சாலை அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்கு மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலை பகுதியை சீரமைக்க வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், கொல்லிமலை.

மேலும் செய்திகள்