ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பத்தலப்பள்ளியில் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காலை முதல் இரவு வரை தொடர்ந்து வாகனங்கள் அதிகமாக இங்கு வந்து சென்றவாறு உள்ளது. இந்த நிலையில், மார்க்கெட் முன்புறம் சர்வீஸ் சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் நடந்து செல்லுக்கூட முடியாத அவலம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், ஓசூர்.