திருப்பூர் தென்ன்ம்பாளையம் தெற்கு உழவர் சந்தை முன்பு உள்ள மெயின் ரோட்டில், வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும வாகன விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. அதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வராஜ், திருப்பூர்.