வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-09-07 15:45 GMT

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் தனியார் பள்ளி உள்ளது. இந்த சாலையில் 4 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் இல்லாததால் இரவில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே தவறி விழுகின்றனர். மேலும் அங்கு வேகத்தடைக்கு அறிவிப்பு பலகையும் இல்லை. தாரமங்கலம் தேர்நிலையம் அருகில் 2 வேகத்தடைகளுக்கும், தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் வெள்ளாளர் தெரு பிரிவு ரோட்டில் 2 வேகத்தடைகளுக்கும் வர்ணம் இல்லை. இந்த முக்கிய போக்குவரத்து உள்ள இடங்களில் வேகத்தடைகளுக்கு முறையான வர்ணம் பூசியும், வேகத்தடைக்கு அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்