பழையபாளையத்தில் இருந்து அலங்காநத்தம் செல்லும் பிரதான சாலை ஏரி அருகே சேதமடைந்து இருந்தது. இந்த சாலை கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சேதமாகி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமான சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-சந்தோஷ், பழையபாளையம்.