பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் இருந்து செரியேறி வழியாக மாங்கோடு பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.