உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திரா சாலை, கபூர் கான் வீதி வழியாக ராமசாமி நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பிரதான சாலையாக விளங்கி வருகிறது. இந்த சூழலில் சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள மரங்களின் கிளைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் கிளைகள் கண்களுக்கு தெரியாததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே கபூர் கான் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணன், உடுமலை.