ஒளிரும் பட்டைகள் பொருத்தலாமே!

Update: 2025-08-31 13:54 GMT

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து உள்ள தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடைகள் இருப்பது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள வேகத்தடைகளிலும் ஒளிரும் பட்டைகள் பொருத்தினால் இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

-நித்திஷ்வைஷிகா, ராசிபுரம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி