கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பைல்காடு கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து தினமும் மாணவ, மாணவிகள் அஞ்செட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வரக்கூடிய அஞ்செட்டி-பைல்காடு சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமான சாலையை அகற்றி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
-பிரபு, அஞ்செட்டி.