சேலம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் 9-வது வார்டு அங்கன்வாடி மையம் செல்லும் ரோடு மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், ஆண்டிப்பட்டி.