பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் பகுதியில் தார்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.