வேகத்தடைகளுக்கு வர்ணம் அவசியம்

Update: 2025-08-17 17:51 GMT

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே மற்றும் சுப்ராயன் ரோட்டில் சுமார் 5 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அனைத்து வேகத்தடைகளுக்கும் வர்ணம் பூசி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜன், சேலம்.

மேலும் செய்திகள்