திருப்பூர் பி.என்.ரோடு போக்குவரத்து நிறைந்த சாலை. இந்த சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வாகனங்களை சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் 40 அடி அகல சாலை குறுகலாகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.