தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தி பஸ் நிலையத்தில் இருந்து அதிராம்பட்டி செல்லும் பிரதான சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். எனவே சாலையின் நடுவே ஆபத்தான உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைத்து அசம்பாவிதத்தை தவிர்க்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணி, தாரமங்கலம்.