ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள கே.சி.சி. நகரிலிருந்து சின்ன ஏலகிரி செல்லும் சாலையின் அருகே வைகை நகர் என்ற பகுதி உள்ளது. தற்போது இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் மெயின் ரோட்டில் இருந்து வைகை நகர் உள்ளே செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியும் நிறைந்து, மக்கள் நடந்து செல்லவே முடியாத அவல நிலை உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஓசூர்.