தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பெரியானூர் பிரிவு சாலையில் இருந்து நம்மாண்டள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் தினமும் சென்று வர பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஆனந்த், பஞ்சப்பள்ளி.