ஆபத்தான பள்ளம்

Update: 2025-08-10 17:30 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த ஜக்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் கடந்த சில மாதங்களாக பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தை சீரமைக்க பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே இந்த பகுதியில் விபத்து நடக்கும் முன்பே இந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-முனிரத்தினம், ஜக்க சமுத்திரம்.

மேலும் செய்திகள்