பழுதடைந்த சாலை

Update: 2025-08-10 16:54 GMT

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லியில் இருந்து நெல்லிமேடு வழியாக மாங்கோடு பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை மின்வாரிய அலுவலகம் அருகே பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்