சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை நடைபெற உள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகில் மற்றும் சுப்ராயன் ரோட்டில் உள்ள 5 வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் காணப்படுகிறது. எனவே அனைத்து வேகத்தடைகளுக்கும் வர்ணம் பூசி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
-சசிராஜன், தாரமங்கலம்.