வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-வசந்தகுமார், அளவாய்ப்பட்டி.
---