ஓசூர் அந்திவாடியிலிருந்து தளி நோக்கி செல்லும் சாலை இணையும் இடம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.வி.எஸ். நகர் நோக்கி வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அந்திவாடியிலிருந்து சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க அந்த பகுதியில் தடுப்பு அல்லது வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும்.
-முத்துநாகசெல்வன், ஓசூர்.