குருக்கபுரம் ஊராட்சி எல்லப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து குருசாமிபாளையம் செல்லும் சாலை வரை குடிநீர் குழாய் இணைப்பதற்காக சாலை ஓரத்தில் குழி தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அதேபோல் திருச்செங்கோடு-ராசிபுரம் மெயின் ரோட்டில் இருந்து குருசாமிபாளையம் வரை செல்லும் தார்சாலை, விநாயகர் கோவிலில் இருந்து வரும் சாலை இணையும் பகுதியில் பள்ளமாக உள்ளது. வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைத்து வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ராமு, குறுக்கபுரம்.