குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-27 18:17 GMT

கடத்தூர் ஒன்றியம் ஓபிளி நாயக்கன்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கெடகாரஅள்ளி. இந்த கிராமத்திற்கு புதுரெட்டியூர் வழியாக செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் இந்த வழியே செல்லும் போது தட்டுத்தடுமாறி செல்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துசாமி, கடத்தூர்.

மேலும் செய்திகள்