கோவை அருகே லிங்கனூர் வீரகேரளம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் குடிநீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளம் நாளடைவில் பெரிதாகி வருகிறது. அந்த சாலையில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலரும் வாகனங்களில் சென்று வருகின்றனர். அவர்கள் சாலையில் கிடக்கும் பள்ளத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாயை சரி செய்வதோடு சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.